சமத்துவமின்மை


உலக அளவில் தொழில் சந்தையில் பாலின சமத்துவமின்மை

மார்ச்,08,2016. உலகின் சில பகுதிகளில் பணித்தளங்களில் பெண்களின் வாழ்வில் முன்னேற்றம் காணப்பட்டாலும், இன்னும், உலகில் இலட்சக்கணக்கான பெண்கள் தங்களின் பணியிடங்களில் சமத்துவத்திற்காக ஏங்குகின்றனர் என்று, ILO எனும் உலக தொழில் நிறுவனம் கூறியுள்ளது. 
2016ம் ஆண்டின் நிலவரம் குறித்து, 178 நாடுகளில் எடுத்த ஆய்வின் முடிவை, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட ILO நிறுவனம், தரமான வேலைகளைக் கண்டுபிடிப்பதற்கும், அதில் நிலைத்து நிற்பதற்கும் எண்ணற்ற சவால்களைப் பெண்கள் எதிர்கொள்கின்றனர் என்று கூறியுள்ளது.
உலக அளவில், தொழில் சந்தையில், பெருமளவில் நிலவும் பாலின சமத்துவமின்மையைக் களைவதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், 2030ம் ஆண்டின் புதிய வளர்ச்சித்திட்ட இலக்கை எட்டுவதற்கு இது நல்ல வாய்ப்பாக உள்ளது என்று ILO நிறுவனம் வலியுறுத்துகிறது.
2015ம் ஆண்டில், 58 கோடியே 60 இலட்சம் பெண்கள், தாங்களாகவே ஏதாவது ஒரு வேலை செய்து குடும்பங்களைப் பராமரித்து வந்தனர் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.  
மேலும், இச்செவ்வாயன்று(மார்ச் 8) உலகெங்கும் சிறப்பிக்கப்பட்ட உலக மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது, சமூகத்தின் தலையாய கடமை எனக் கூறியுள்ளார். பெண்களுக்கு சம உரிமையையும், கண்ணியமான வாழ்க்கையையும் அளிக்க வேண்டும். அவர்களது உரிமை மதிக்கப்பட வேண்டும். இதுவே நமது முதன்மையான பொறுப்பு. அப்போதுதான் பெண்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பைச் சிறந்த முறையில் அளிக்க முடியும் என்று, மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
.சுதந்திரத்திற்கு பிற்பட்ட அரசியலில் சாதி
சுதந்திரத்தை உடனடியாகத் தொடர்ந்து எந்த ஆண்டுகளில் இலங்கையின் அரசியல் ஒழுங்கு மதச் சார்பற்றதாக இருந்தது. உள்ளுர் அரசியல்சார் உயர்குழாத்தின் உடன்பாட்டுடன் பிரித்தானிய அரசியல் யாப்பு நிபுணர்களால் வரையப்பட்ட சுதந்திரத்திற்குப் பிந்திய முதலாவது அரசியல் யாப்பு, அரசு எந்தவோர் இனத்துடனோ மதத்துடனோ தன்னை இனங்காட்டமாட்டாது என்ற தத்துவத்தை உள்ளடக்கியிருந்தது.
 அந்த அர்த்தத்தில் பார்த்தால் சோல்பரி அரசியல் யாப்பு காலனித்துவ நீக்கம் செய்யும் தேசியவாத அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ, வெளிப்படுத்துவதாகவோ அமையவில்லை. சிறுபான்மையினருக்கு பாரபட்சம் காட்டுவதாக அமையக்கூடிய சட்டங்களை செல்லுபடியாகாததாக்குவதன் மூலம் குழுக்களுக்கு எதிரான ஒருதலைப்பட்சமானவற்றை சட்டரீதியற்றதாகச் செய்ய இந்த யாப்பு நிச்சயமாக முனைந்தது. இதேபோன்று இன அல்லது சமூக ரீதியில் பின் தங்கிய சிறுபான்மையினருக்கு விசேட வாய்ப்புக்களை வழங்கும் கோட்பாட்டினையும் இந்த அரசிய் யாப்பு ஏற்றுக்கொள்ளவில்லை
. சமூகச் சிறுபான்மையினருக்குச் சட்டவாக்கப் பிரதிநிதித்துவம் வழங்குதல் பற்றிய பிரச்னை மறைமுகமான விதத்தில் இரண்டு பொறிமுறைகளினூடாகக் கவனத்தில் கொள்ளப்பட்டதென்று கருதலாம்.குறிப்பிட்டதொரு சாதியினர் பெருமளவில் செறிந்திருககும் பிரதேசங்களில் அவர்கள் தம் சாதியைச் சேர்ந்த ஒருவரைப் பாராளுமன்ற அங்கத்தவராகத் தெரிவு செய்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் விதத்தில் பல அங்கத்துவத் தேர்தல் தொகுதிகளை எல்லை குறித்தல் முதலாவது உத்தியாகும்.
அம்பலாங்கொட- பலபிட்டி தொகுதியும் பின்னர் , பெந்தா – எல்பிட்டி தேர்தல் தொகுதியும் ‘கரவா’,’சலாகம’,’வகும்புர’ சாதிக்குழுக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டன.
 மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு அல்லது மேற்சபைக்கு (செனற்), ‘நியமன அங்கத்தவர்களைத் தெரிவு செய்தல்’ இரண்டாவது உத்தியாகும். எனினும் இங்கு சாதிப்பிரதிநிதித்துவம் என்ற கோட்பாடு தெளிவாக முன்வைக்கப்படவே இல்லை. பிரதிநிதித்துவப்படுத்தப்படாத சாதிக்குழுக்கள்;, தமது பிரச்னையை அரசியற் தலைமைத்துவத்திற்குச் சமர்ப்பித்தால் அத்தகைய சமுதாயங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கும் வாய்ப்பு உண்டென இது புரிந்து கொள்ளப்பட்டது. தொடரும் அரசியல் யாப்புச் சிந்தனையில் மொழி அல்லது சமூக சமத்துவ வகைமைகளின் இன்மை மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.
 சமூகச் சீர்திருத்தச் சொல்லாடல் இன்மைக்குச் சமாந்தரமாக , சாதி அடக்குமுறைப் பிரச்னை தொடர்பான ஒரு பொதுக்கொள்கை பற்றிய மௌனமும் தொடர்ந்து நிலவி வருகின்றது. இந்த இன்மையைப் பல்வேறு மட்டங்களிற் காணலாம். முதலாவதாக சாதி அடக்குமுறை பொதுவாக நாட்டின்
சமூக முன்னேற்றத்திற்கு ஒரு சமூக அரசியற் தடையாகவுள்ளதென்று பொதுவாகக் கருதப்பட்டபோதிலும் சுதந்திர இலங்கையின் சட்டசபை , சாதி அடக்குமுறையின் காரணமாக எழுகின்ற பொதுக்கொள்கைப் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதற்கு குறிப்பான ஆர்வம் எதையும் காட்டவில்லை.
தனிப்பட்ட நிலையில் அடிக்கடி ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு முரணான வகையில் பொதுத்துறையில் வெளிப்படுத்தப்படும் சிங்கள நம்பிக்கை என்னவென்றால் கடந்த காலத்தில் இருந்தது போல் அல்லது தமிழ்ச்சமூகத்தில் இருப்பது போல் இப்பொழுது சிங்கள சமூகத்தில் சாதி ஒரு பிரதான பிரச்னையல்ல என்பதாகும். 
சி;ங்கள சமூகத்தில் நிலவும் சாதி தொடர்பான இப் பொது மனப்பாங்கு இலங்கையின் அரசியல் யாப்பு, சட்டவாக்கம், நிர்வாகம் என்ற துறைகளின் பொதுக்கொள்கைச் சொல்லாடலிலும் மறைமுகமாகச் செல்வாக்குச் செலுத்தியது. இந்தியாவில் இருப்பது போல சாதி அடிப்படையிலான சமூக இயலாமைகளை அங்கீகரிக்கின்ற ஒரு யாப்பியல் கொள்கை இலங்கையில் இல்லை.
அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் யாப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நிவாரணமும் சலுகையும் வழங்கும் கொள்கைகளும் இல்லை. அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் உள்ள பாரபட்சம் காட்டாமை என்பது பற்றிய பிரிவே இலங்கையின் அரசியல் யாப்பு, சாதியை ஒரு வகைமையாக அங்கீகரிக்கும் ஒரே ஒரு சந்தர்ப்பமாகும். 1978 ஆம் ஆண்டு யாப்பின் உறுப்புரை 12, ‘சட்டத்தின் முன் யாவரும் சமம்’ எனப் பிரகடனப்படுத்திய பின்னர், பாரபட்சம் காட்டாமை என்ற கொள்கையைப் பின்வருமாறு விபரிக்கின்றது.
‘இனம், சமயம், மொழி,சாதி,பால், அரசியல் அபிப்பிராயம் பிறப்பிடம் என்ற அடிப்படையில் அல்லது இவற்றுன் எவையேனும் ஒன்றின் அடிப்படையில் எந்தவொரு பிரஜைக்கும் பாராபட்சம் காட்டப்படலாகாது. ‘அத்துடன் உறுப்புரை 12 இன் உபபிரிவு(3) பொதுத்துறையில் பாரபட்சம் காட்டப்படுதல் எவ்வாறு தவிர்க்கப்படலாம் என்பதை பின்வருமாறு கூறுகின்றது.
 ‘இனம் , சமயம்,மொழி,சாதி,பால் என்ற அடிப்படையில் அல்லது இவற்றுள் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் கடைகள், பொதுச்சிற்றுண்டிச்சாலைகள்,ஹோட்டல்கள், பொதுக் களியாட்ட இடங்கள், தனது மதத்தி;;ற்குரிய பொது வழிபாட்டிடங்கள் என்பவற்றுக்குச் செல்வதற்கு எவரேனும் தடுக்கப்படவோ, கட்டுப்படுத்தப்படவோ நிபந்தனைக்கு ஆளாக்கப்படவோ கூடாது. எனினும், பாரபட்சம் காட்டப்படும் துறைகளில் திருத்தச் செயற்பாடுகளுக்காக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவும் உபபகுதியில் ஆச்சரியமான முறையில் சாதி தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடு பின்வருமாறு கூறுகின்றது.
 ‘ பெண்கள் , பிள்ளைகள் அல்லது உடல் ஊனமுற்றோரின் முன்னேற்றத்திற்காகச் சட்டத்தின் மூலம் துணைச்சட்டத்தின் மூலம் அல்லது அல்லது நிறைவேற்றுச் செயல்களின் மூலம் விசேட ஏற்பாடுகள் இடம்பெறச் செய்வதை இவ்வுறுப்புரையிலுள்ள எதுவும் தடுத்து நிறுத்தக்கூடாது’. 1971, 1978 ஆம் ஆண்டுகளில் அரசியல் யாப்புச் சட்ட மூலங்களின் வரைவில் அடிப்படை உரிமைகளுக்கான ஏற்பாடுகள் பற்றிய விவாதம், பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட பொழுது, சாதியானது பாரபட்சம் காண்பிக்கப்படுவதற்கு ஒரு காரணமாகின்றது என்று வெறுமனே குறிப்பிடப்பட்டமையைத் தவிர, சாதி ரீதியான பாரபட்சம் பற்றி விசேடமான விவாதங்கள் எதுவும் இடம் பெறவில்லை.
சுதந்திரத்திற்குப் பிற்பட்ட இலங்கைப் பாராளுமன்றத்தில் இழிவான விதத்தில் அவ்வப்போது சாதி பற்றிக் குறிப்பிட்ட போதிலும் சாதி வேறுபாடு காட்டுதல் பற்றிய பிரச்னை, சட்டசபையின் கொள்கை ரீதியான கவனத்தை ஈர்ப்பதறகுத் தகுதியுடையது என்பது மூன்று சந்தர்ப்பங்களிலேயே வெளிப்பட்டன.
முதல் இரண்டு சந்தர்ப்பங்களிலும் இடதுசாரிச் சார்புடைய சிங்கள, தமிழ் மேற்சபை உறுப்பினர்கள், சாதி அடிப்படையிலான பாரபட்சங்களைத் தடை செய்வதற் வேண்டிய சட்டப் பிரேரணைகளை நிறைவேற்ற முயன்ற போதிலும் அப்பிரேரணைகள் தோற்கடிக்கப்பட்டன. மூன்றாவது சந்தர்ப்பம், 1957 இல் இடம் பெற்றது.சாதியை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பாரபட்சங்களை சட்டத்திற்குப் புறம்பானவையாக்கும் நோக்கத்துடன் மேற்சபை சட்ட மூலமொன்றை முன் வைத்தது.
 சமூக இயலாமைத் தவிர்ப்புச் சட்டம் என்ற பெயரில் இது சட்டமாக்கப்பட்டது. இச்சட்டம் பிரதானமாக தமிழ்ச்ச சமூகத்தில் சாதி வேறுபாட்டுப் பிரச்னையை அணுகுவதாகவ அமைந்திருந்தது. இச்சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்;ந்தவர்கள் கோவில்கள், உணவகங்கள், அரசாங்க அலுவலகங்கள், தொழில் பார்க்கும் இடங்கள், பொது வாகனங்கள், பாடசாலைகள் போன்ற பொது இடங்களுக்குச் செல்லுதல் தடுக்கப்பட்டிருந்தது. தமிழ்ச்சமூகத்தைச் சீர்திருத்துவதற்கு அரசின் தலையீடு அவசியம் என்பதே இச்சட்டத்தின் முழுத்தாற்பரியமாக அமைந்தது.

இதேவேளை சிங்களச் சமூகத்தில் சாதி அடிப்படையில் நிகழ்ந்த அநீதிகளை வெளிப்படையாகச் சீரமைப்பதற்கு நிர்வாக நடவடிக்கைகள் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை எனலாம்.
அரசியல் மற்றும் சட்டத்துறைச் சொல்லாடல் போன்று நிர்வாகச் சொல்லாடலிலும் ‘ரொடிய’, ‘கின்னர’ ஆகிய வெளி ஒதுக்கப்பட்ட இரண்டு சாதிகள் நீங்கலாக வேறு சாதிகளைப் பொறுத்தவரை சாதி அடிப்படை அநீதிகள் நிலவுவது மறுக்கப்பட்டே வந்துள்ளது.1951 ஆம் ஆண்டின் கண்டி விவசாய ஆணைக்குழுவின் அறிக்கை இதனை விளக்குகின்றது. இலங்கை சுதந்திரம் பெற்ற ஓராண்டிற்குள் அதாவது 1949 இல் கண்டிச் சிங்கள விவசாயிகளின் மனக்குறைகள் பற்றி விசாரிப்பதற்கும் அவர்களுடைய பொருளாதார, சமூக நிலைமைகளை மேம்படுத்துவதற்கான விதப்புரைகளை வழங்குவற்குமென இவ்வாணைக்குழு நியமிக்கப்பட்டது. கண்டிய விவசாயிகளின் நிலைமைகள் பற்றிய தகவல்களை வேண்டி, ஆணைக்குழு அனுப்பிய வினாக்கொத்தில் ‘சமூக நிலைமைகள்’ என்ற ஒரு பிரிவு இடம் பெற்றிருந்தது.
 இப்பிரிவில் சாதி பற்றிய ஒரு வினாவும் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம் பெற்ற சாதி பற்றிய ஒன்றரைப் பக்க விபரத்தில் ‘சகல கிராமப்புற பிரதேசங்களிலும் வெளிப்படையான சாதி வேறுபாட்டு வடிவங்கள் மிகப் பெருமளவிற்கு மறைந்துவிட்டன. எஞ்சியிருப்பவையும் வேகமாக மறைந்து வருகின்றன’ என்பதை ஆணைக்குழு அங்கத்தவர்கள் மகிழ்வுடன் அவதானித்துள்ளதாக ஆணைக்குழு தமது முடிவைத் தெரிவித்தது. ரெடியா ‘கின்னர’ சமூகங்களின் அந்தஸ்து தொடர்பாக மட்டுமே அரச தலையீடு வேண்டப்பட்டதாக ஆணைக்குழு கருதியது. அறிக்கையின் வாசகம் பின் வருமாறு:
‘ரொடியா’, (நகர சுத்தி செய்வோர்)அல்லது ‘கின்னர’ (பாய் இழைப்போர்) ஆகிய சமூகங்களைத் தவிர சாதியானது குறிப்பிடக்கூடிய அளவிற்கு ஊனம் விளைவிக்கும் நிலை தற்போது இல்லை என்பது அவதானிக்கக்கூடிய ஓர் அம்சமாகும். குறிப்பாகப் பின் தங்கிய இந்த இரண்டு சமூகத்தினரும் சுரண்டப்படுவதை தடுப்பதற்கும் பிரத்தியேகமான பாதுகாப்பு வழங்குவதற்கும் அவர்களுடைய தற்போதைய பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் சில விசேட உதவிகள் வழங்கப்பட்டு கவனஞ் செலுத்தப்படவேண்டியுள்ளது’
கண்டிய மாவட்டங்களிலுள்ள ஏனைய கீழ்ப்படுத்தப்பட்ட சாதியினரின் நிலைமைகள் தொடர்பாக பொதுக் கொள்கைத் தலையீடு அவசியமில்லை என்பதே இவ்வாய்வில் உள்ளடங்கியிருக்கும் எடுகோளாகும். ‘ கல்வியின் பரம்பலும் அபிவிருத்தியின் நவீன போக்குகளும் சம சந்தர்ப்பம், சம உரிமைகள் என்ற நிலைமைகளை உருவாக்கியுள்ளன. இவை தன்னளவிலேயே சாதி வேறுபாடுகளை ஒழிப்பதை நோக்கிப் பெரிய முன்னேற்றமாய் அமைந்தன என்று ஆணைக்குழு நம்பியது. சிங்கள சமூகத்தில் சாதி பற்றிய கண்டிய விவசாய ஆணைக்குழுவில் முடிவுகள்,சிங்கள பொது அரங்கில் தொடர்ச்சியாக மீள் உருவாக்கம் செய்யப்படும் ஒரு பெரிய அரசியற் கட்டுக்கதையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
 சிங்களச் சமூகம் சாதி அநீதிகளிலிருந்து சார்பளவில் விடுபட்டுள்ளதென்றும் நவீனத்துவத்தின் முகவர்களான இலவசக் கல்வி, நலன்புரி அரசு, சனநாயகம் என்பன
சமூகச் சீர்திருத்தங்களை ஆரம்பிப்பதற்கு அரச தலையீட்டுக் கொள்கைகளின் அவசியத்தை அடிப்படையில் பொருத்தமற்றதாகவும் தேவையற்றதாகவும் செய்துவிட்டனவென்று இக்கட்டுக்கதை முன்னூகஞ் செய்கிறது. இக்கட்டுக்கதை பிறிதொரு ஆணைக்குழுவினரால் கேள்விகளாக்கப்படுவதற்குக் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்கள் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. இளைஞர் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு இதனைச் செய்தது. ..







Comments

Popular posts from this blog

பள்ளிக்கு வெளியே கற்றல் ,பள்ளிக்கு உள்ளே கற்றல்.

சமூக வேற்றுமையைப் புரிந்து கொள்வதில் கல்வியின் பங்கு

சமூக ஊடகங்கள்