பள்ளிக்கு வெளியே கற்றல் ,பள்ளிக்கு உள்ளே கற்றல்.
வகுப்பறைக்கு வெளியே:
தெளிவாகப் பேசுதல், நிமிர்ந்து முகம் பார்த்துப் பேசுதல், சத்தமாக, தைரியமாகப் பேசுதல் போன்ற பண்புகளை வகுப்பறையில் வளர்த்துக்கொள்ளும்போது, உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை வரும். இந்தப் பண்புகளே வெளி உலகத்தில் கெட்ட எண்ணங்களுடனும், நயவஞ்சகமாகவும் பேசி, தவறான வழியைப் பயன்படுத்த நினைப்பவருக்கும் ஒரு பயத்தைக் கொடுக்கும்.
அந்நியரின் பரிசுப் பொருள் வேண்டாம்:
எந்த உறவினரும், அந்நியரும் உங்கள் பெற்றோருக்குத் தெரியாமல் கொடுக்கும் பரிசுப் பொருட்களை வேண்டாம் என்று தெளிவாக மறுத்துவிடுங்கள்.
மாணவர்கள், தம் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்திக்கொள்ள, ஆசிரியர்களும் பெற்றோர்களும் உதவ வேண்டும்.
பாராட்டு எனும் விருது!
பிறரைப் பாராட்டுவது போல உங்களையே பாராட்டிக்கொள்ளுங்கள். உதாரணமாக, இன்று செய்த செயல்களில் பெருமைப்படக்கூடிய செயல் எது? நாளை எந்தச் செயலை சிறப்பாகச் செய்யலாம் போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.
ஒருவரைப் பாராட்டும்போது, அவர்களிடம் புத்துணர்ச்சி ஏற்படும். செயல்களில் ஈடுபாட்டுடன் பங்கேற்க உதவும். நமது பாராட்டு, அவர்களுடைய செயலுக்குக் கிடைத்த அங்கீகாரமாக அவர்களுக்குத் தோன்றும்.
ஒரு மாணவர், மற்றவரிடம் தொடர்புகொள்ளும்போது செய்ய வேண்டியவை:
முதலில், தொடர்புகொள்ளும் நபரை வரவேற்க வேண்டும். வயதில் மூத்தவராக இருந்தாலும் இளையவராக இருந்தாலும் எழுந்து நின்று வரவேற்க வேண்டும். கை கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும்.
சந்திப்பவரின் நலம் விசாரிக்க வேண்டும்.
தொடர்புகொள்ளும் நபரை, பெயரைக் குறிப்பிடாமல் 'வாங்க’ 'போங்க’ என்ற மரியாதையான வார்த்தைகளில் அழைக்க வேண்டும்.
பள்ளிக்கு உள்ளே
ஆசிரியர்கள், கற்பித்தல்
கற்பித்தல் முறை
தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதால் மட்டுமே, கற்பித்தல்-கற்றல் சூழ்நிலையை மாற்ற இயலாது
தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் மட்டுமே கற்பித்தல் முறைகளை மாற்ற இயலாது. எனினும், ஏதுவான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், தங்கள் கற்பிக்கும் முறைகளை மாற்றியமைத்துக் கொள்ள அவை ஆசிரியர்களுக்கு உதவும். ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகள் மற்றும் காரணவியல் அறிவு, தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை ஆசிரியர்கள் பயன்படுத்தும் விதம் ஆகியவை மாணவர்கள் கற்றலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கற்போரை மையப்படுத்திய கல்விச் சூழலை உருவாக்க ஆசிரியர்களுக்கு உதவக்கூடிய கருவியாக தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் காணப்படுகின்றன
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான நிறுவன (OECD - Organization for Economic Co-operation and Development) உறுப்பு நாடுகளில், தகவல் தொழில்நுட்பங்கள் உதவியுடன் மாணவர்களின் புரிதல் மற்றும் சிந்தனையை, முழு வகுப்பு அல்லது சிறு குழு விவாதங்கள் மூலம் சீர்படுத்துவதே, தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் சிறந்த பயன்பாடு என்ற ஒத்த கருத்து நிலவுகிறது. ஆசிரியரை மையப்படுத்திய முறைகளிலிருந்து, கற்போரை மையப்படுத்திய கல்வி முறைகளுக்கு மாறும் முயற்சிகளை ஊக்குவிப்பதாகவும், ஆதரிப்பதாகவும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் கருதப்படுகின்றன.
தற்போதைய கற்பிக்கும் முறைகளை மாற்றியமைக்க மற்றும் ஆதரிக்க தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம்:
தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியர்களின் கற்பிக்கும் முறைகளில், வழக்கமான முறைகளில் சிறிதளவு அல்லது பெரிய அளவிலான அடிப்படை மாற்றங்கள் நிகழலாம். தற்போதைய கற்பிக்கும் முறைகளை வலுப்படுத்தவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே நிகழும் உறவுநிலைகளை மாற்றியமைக்கவும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.

தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைக் கருவியாகப் பயன்படுத்தி தகவல்களைக் காட்சிப்படுத்துவது, கலவையான முடிவுகளைத் தருகிறது:
தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்துவது (ஒளிப்படக்காட்சிகள், LCD புரஜக்டர்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், திரையில் காட்டப்படும் அதே நேரத்தில் மாணவர்களும் கணினி திரையில் பார்க்கும் வகையிலான காட்சிகள் போன்றவற்றில்), கடினமான பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளவும், விவாதங்களை ஊக்குவிக்கவும் (குறிப்பாக சூழ்நிலைகளை உண்டாக்கி தெளிவுபடுத்தல் - simulations) உதவுவது மட்டுமல்லாமல், வழக்கமான கற்பிக்கும் முறைகளை வலுப்படுத்தும் அதே வேளையில், காண்பிக்கப்படும் காட்சியின் பொருளில் கவனம் செல்லாமல், காண்பிக்கப் பயன்படும் கருவிகள் நோக்கி கவனம் சிதறவும் வாய்ப்புகள் உள்ளது.

Comments
Post a Comment