கற்பித்தல் மற்றும் கற்றல்

கற்பித்தல் மற்றும் கற்றல்


கற்பித்தலும் கற்றலும்

கற்பித்தலும் கற்றலும் பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும். இக்காரணிகள் கற்பவர் தன் இலக்கு நோக்கி செல்லும் போதும், விஷயங்களைத் தெரிந்துகொள்ளும்போதும், பழக்கவழக்கங்கள், கல்வி கற்றல் மூலம் அடையும் திறன்கள் முதலியவற்றில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக அமைந்துள்ளது.
கடந்த நூற்றாண்டுகளில் கல்வி பற்றி பல்வேறு வித பார்வைகள் இருந்தன. கல்வி என்பது அறிவு சார்ந்தது (கற்றல் மூளையின் செயல்திறனால் நிகழ்கிறது) அல்லது கல்வி வளர்ச்சி சார்ந்தது (கற்கும் அனுபவத்தால் அறிவு ஏற்படுகிறது) என்ற இருவேறுவித பார்வைகள் இருந்தது.
 இவ்விரு கொள்கைகளை பிரித்துப் பார்க்காமல் ஒன்றிணைத்து பார்த்தோமானால் கற்றல் முறையில் பல்வேறு வாய்ப்புகள் இருப்பதை உணரலாம். இவற்றை ஒருங்கிணைக்கும் போது பல்வேறு பிற காரணிகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
 அவற்றில் சில - அறிவுத்திறன், கற்கும் முறை, பலதரப்பட்ட தனித்திறன்கள், சிறப்பு தேவை உள்ளவர்கள் மற்றும் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்டவர்களின் கல்வி கற்கும் முறை.

கட்டுக்கோப்பு - திறனாளர் கொள்கை

கட்டுக்கோப்புத்திறன் கொள்கையில் மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே பெற்ற கல்வி, கருத்துகள் மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்டு கல்வி முறை அமைகிறது. தாங்கள் ஏற்கனவே அறிந்தவைகளோடு  புதிய தகவல்களையும் சேர்த்து புதிய புரிதல்களை உருவாக்குகிறார்கள்.
இந்த முறையில் கற்பிக்கும் ஆசிரியர் மாணவர்களுக்கு பயிற்சிகளைக் கொடுக்கிறார். அதனை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை கவனித்து தக்க ஆலோசனை வழங்கி புதிய முறைகளில் சிந்திக்கத் தூண்டுகிறார்.
 எளிய தகவல்களைச் சொல்லி அதில் மாணவர்களின் எண்ணங்கள் தூண்டப்படும் இம்முறையில் கல்வி அறிவு சிறிது சிறிதாக அதிகரிக்கப்படுகிறது. வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர்க்கும் இம்முறை ஏற்றதாகும்.
கண்ணோட்டம்
ப்ரூனரின் கோட்பாடுகளின்படி கற்றல் என்பது ஒரு சுறுசுறுப்பான நிகழ்வு. 
மாணவர்கள் தான் ஏற்கனவே கற்றுக்கொண்டவைகளில் இருந்து புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்கின்றனர் என்பது தான் இக்கொள்கையின் சாராம்சம். கொடுக்கப்பட்ட தகவலை அலசி, ஆராய்ந்து, கோட்பாடுகளை உருவாக்கி அறிவுசார் முடிவுகளை மாணவர்கள் எடுக்கின்றனர். 
தகவலின் அர்த்தம் புரிந்து அதை வகைப்படுத்துகின்றனர். இது கொடுக்கப்பட்ட தகவலுக்கு அடுத்த நிலையை சிந்திக்க வாய்ப்பளிக்கிறது.
பயிற்று முறையைப் பொறுத்தவரையில் மாணவர்கள் அவர்களாகவே கொள்கைகளைக் கண்டுபிடிக்கும்படி பயிற்சியாளர் ஊக்கப்படுத்த வேண்டும். இருவரும் ஆக்கப்பூர்வ உரையாடல்களில் அதிகம் ஈடுபடவேண்டும்
இங்கு ஆசிரியரின் பணி என்பது பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் படி மாற்றம் செய்வதுதான். பாடத்திட்டம் ஒரு சுருள் போல் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே கற்றுக்கொண்டவைகளிலிருந்து புதியவற்றை அறிவார்கள்.
பயிற்று முறை கீழ்கண்ட நான்கு கூறுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.:
(1) கற்றல் முறை பற்றிய பார்வை.
(2) பாடத்திட்டம் எளிதில் புரியும் வண்ணம் அமைந்திருக்க வேண்டும்.,
(3) எந்த வரிசையில் கொடுத்தால் மாணவர்களுக்கு எளிதில் விளங்கும் என்பதை அறிதல்
(4) பாராட்டுதல்கள் & தண்டனைகளின் தன்மை மற்றும் அவற்றிற்கிடையேயான கால இடைவெளி.
எளிமை, புதிய கோணத்தில் வழங்குதல் அதிக தகவல்களை உள்ளடக்குதல் முதலியவை மூலம் கல்வியறிவை வழங்குதலில் புதிய வழிமுறைகள் காணப்பட வேண்டும்.
கற்றல் முறைகளில் சமூக மற்றும் கலாச்சாரத்தின் தாக்கத்தைப் பற்றி தன் சமீபத்திய நூல்களில் (1986,1990,1996) ப்ரூனர் குறிப்பிடுகிறார்.
பயன்பாடு
ப்ரூனரின் இந்த பயிற்று முறைக்கான கோட்பாடு தனிமனித அறிவுத்திறனை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியுடன் இக்கொள்கை தொடர்புடையது.
 ப்ரூனரின் இக்கருத்துகள் அறிவியல் மற்றும் கணிதம் கற்றல் முறை தொடர்பான கருத்தரங்கு மூலம் பெறப்பட்டது. சிறு குழந்தைகளுக்கான கணித, சமூக அறிவியல் பாடங்கள் வாயிலாக ப்ரூனர் தன் கொள்கைகளை விளக்குகிறார்.
 ப்ரூனர், குட்நவ், ஆஸ்டின் (1951) ஆகியோர் எழுதிய புத்தகத்தில் பகுத்தறியும் திறன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகள் மொழியைக் கற்றுக்கொள்ளுதல் பற்றியும் ப்ரூனர் குறிப்பிடுகிறார்.
கொள்கைகள்
1. மாணவன் ஆர்வத்துடனும் எளிதில் புரிந்து கொள்ளும்படியும் பாடக்குறிப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
2. குறிப்புகள் எளிதில் புரியும்படி இருக்கவேண்டும்.
3. மேலும் பல தகவல்களை அறிய செய்யும் வண்ணம் விடுபட்ட செய்திகளை அறியும்படி அமைக்கவேண்டும்.

செய்முறைக் கற்றல் கொள்கை சி.ரோஜெர்ஸ்

செய்முறைக் கற்றல் கொள்கை மக்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பல அடுக்கு மேம்பாட்டு கல்வி கற்றல் முறையைக் கொடுக்கிறது. செய்முறைக் கற்றலில் நேரடி அனுபவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதுதான் மற்ற முறைகளிலிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது.  நேரடி அனுபவம் என்ற ஒன்றுதான் புலன்களுக்கு முக்கியத்துவம் தரும் பகுத்துணர்ந்து கற்றல் முறையிலிருந்து இம்முறையை வேறுபடுத்திக் காட்டுகிறது.
நேரடி அனுபவத்தின் வாயிலாக அறிவு பறிமாற்றம் நிகழ்வதுதான் செய்முறைக் கற்றலின் சிறப்பு

Comments

Popular posts from this blog

பள்ளிக்கு வெளியே கற்றல் ,பள்ளிக்கு உள்ளே கற்றல்.

சமூக வேற்றுமையைப் புரிந்து கொள்வதில் கல்வியின் பங்கு

சமூக ஊடகங்கள்