உலகமயமாதல்
உலகமயமாதல்
தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், அரசியல், பண்பாடு, ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக சமூகங்களுக்கிடையேயான அதிகரிக்கும் தொடர்பையும் அதனால் ஏற்படுத்தப்பட்டுவரும் ஒருவரில் ஒருவர் தங்கிவாழ் நிலையையும் உலகமயமாதல் எனலாம். உலகமய சூழலில் ஒரு சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளும் நிகழ்வுகளும் மற்றைய சமூகங்களில் கூடிய விகித தாக்கத்தை ஏதுவாக்குகின்றது. உலகமயமாதல் வரலாற்றில் ஒரு தொடர் நிகழ்வுதான், ஆனால் இன்றைய சூழல் உலகமயமாதலை கோடிட்டுஉலகமயமாதலும் பண்பாடும்
உலகமயமாதல் பலமான மொழி, பண்பாட்டு, அடையாளங்களை முன்னிறுத்தி சிறுபான்மை இன - மொழி - பண்பாட்டு அழிவுக்கு அல்லது சிதைவுக்கு இட்டு செல்வதாக சிலர் வாதிக்கின்றனர். இக்கூற்றில் உண்மையுண்டு, எனினும் ஒரு சமூகத்தின் அடிப்படைக் கூறுகளை இழக்காமல் உலகமயமாதல் உந்தும் அல்லது தருவிக்கும் அம்சங்களையும் ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ள முடியும். அதாவது உலகமயமாதல் இருக்கும் ஒன்றின் அழிவில் ஏற்படமால், இருக்கும் ஒன்றோடு அல்லது மேலதிகமான அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஒரு உந்தலாகவும் பார்க்கலாம்.
உலகமயமாதலும் சாதியக் கட்டமைப்பும்
உலகமயமாதல் பல முரண்பாடான விளைவுகளை உந்தக்கூடியது. ஒரு புறத்தில் மரபுவழி சாதிய-சமூக கட்டமைப்புக்களால் பிணைக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட சமூகங்களை, குடுமங்களை, தனிமனிதர்களை விடுவிக்ககூடிய தொழில், தொடர்பு, போக்குவரத்து, கல்வி வாய்ப்புக்களை உலமயமாதல் முன்வைக்கின்றது. அதேவேளை பொருள் முதலாளித்துவ சுரண்டலுக்கும், அடிமைத்தனத்துக்கும், சமூக-குடும்ப சிதைவுக்குமான காரணிகளையும் உலகமயமாதல் கொண்டிருக்கின்றது.
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் தாமஸ் ப்ரீட்மன் உலகமயமாதல் பற்றி The World is Flat என்ற புத்தகம் எழுதியிருக்கிறார்.
விளைவுகள்
பொருளியல்
1955 ஆம் ஆண்டுக்கும் 2007 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உற்பத்திப் பொருட்களினது பன்னாட்டு வணிகம் 100 மடங்குகளுக்கு மேலாக (95 பில்லியன் ஐ.அ.டாலர்களில் இருந்து 12 டிரிலியன் ஐ.அ.டாலர்கள் வரை) அதிகரித்து உள்ளது.[1]
21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், விரிவடைந்த வணிகம், முதலீடு என்பவை காரணமாக ஒவ்வொரு நாளும் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான பல நாட்டு நாணய வணிகம் இடம்பெற்றது.
வணிகப் போட்டிகளுக்குத் தாக்குப் பிடித்து, உலக வணிகச் சந்தையில் நின்று நிலைப்பதற்கு நிறுவனங்கள், தமது உற்பத்திகளை மேம்படுத்த வேண்டி இருப்பதுடன், தொழில்நுட்பங்களையும் திறமையுடன் பயன்படுத்த வேண்டி உள்ளது.
அளவு மீறிய விரைவான வளர்ச்சியினால் சில வெளிப்படையான பிரச்சினைகள் இருந்தாலும், பல நாடுகளை வறுமையில் இருந்து மீட்பதற்கு உலகமயமாதல் ஒரு நேர்நிலை ஆற்றலாக விளங்குவதாக முன்னாள் ஐக்கிய நாடுகளின் உலகமயமாதல் தொடர்பான ஆலோசகரான ஜகதீசு பகவதி என்பார் குறிப்பிடுகிறார். அவருடைய கூற்றுப்படி, உலகமயமாதல், விரைவான பொருளாதார வளர்ச்சியுடன் கூடிய பொருளியல் சுழற்சியை உருவாக்குகிறது.[2]
உலகமயமாதலின் நன்மைகளும், தீய விளைவுகளும் நாடுகளிடையேயும் பிரதேசங்களிடையேயும் சமமாகப் பகிரப்படுவதில்லை.
மூளைசாலிகள் வெளியேற்றம்
செல்வந்த நாடுகளில் உள்ள வாய்ப்புக்கள் வறிய நாடுகளில் உள்ள திறன் பெற்ற தொழிலாளர்களைக் கவருவதனால் மூளைசாலிகள் வெளியேற்றம் ஏற்படுகின்றது. எடுத்துக் காட்டாக, பல்வேறு வறிய நாடுகளிலிருந்து பயிற்சி பெற்ற தாதிகள் வேலைக்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு வருகின்றனர்.[3] இதனால், புதிய வெளிநாட்டுத் திறனாளர்களைப் பெறுவதற்கு ஆப்பிரிக்காவுக்கு மட்டும் ஆண்டு தோறும் 4.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு ஏற்படுகிறது. இது போலவே மூளைசாலிகள் வெளியேற்றத்தின் மூலம் இந்தியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது.[4]
வணிகச் செயலாக்கப் புறத்திறனீட்டம்
வணிகச் செயலாக்கப் புறத்திறனீட்டம் என்பது பல்வேறு வணிகச் செயற்பாடுகளுக்காக சேவைகளை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்வதைக் குறிக்கும். இது மலிவான சேவைகளை வழங்குவதற்கு உதவினாலும், சில இடங்களின் சேவைத்துறை வேலை வாய்ப்புக்களை வேறிடத்துக்கு மாற்றிவிடுகிறது. எனினும் மலிவான தொழிலாளர் கிடைக்கக்கூடிய இந்தியா போன்ற நாடுகள் இதனால் பெரிதும் பயன் அடைகின்றன. எதிர்வரும் சில பத்தாண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கான முதன்மை உந்து சக்தியாகத் திகழப்போவது புறத்திறனீட்டத் துறையே. இது பரவலாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலை வாய்ப்புப் பெருக்கம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்குப் பங்களிப்புச் செய்கிறது".[5][6]
Comments
Post a Comment