பள்ளி பாடத்தின் முக்கியத்துவம்
பள்ளி பாடத்தின் முக்கியத்துவம்
சமூக அறிவியல்
இந்தியப் பள்ளிகளில் சமூக அறிவியல் கற்பித்தலின் பரிணாம வளர்ச்சி:
பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்குப் பிறகு இந்தியாவில் சமூக அறிவியல்களைக் கற்பிப்பது, மற்ற புதிய விடுதலை பெற்ற தேசங்களைப் போல், புதிய நவீன இந்தியாவை நினைத்து உருவாக்கும் தேவைகளால் அதிக முக்கியத்துவம் பெற்றது.
இந்தியாவில் ஆரம்பகால சமூக அறிவியலின் தோற்றமும், அவசியமும் பற்றி அறிய வேண்டுமானால், ‘பொதுவான குடிமக்கள் கல்வியில் சமூக அறிவியல் கற்பிக்கும் பங்கு’ என்ற யுனெஸ்கோ, 1954:60 அறிக்கையின் கொள்கைதான் மூலகாரணமாக இருக்கும்.
இதன் மூலம், இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே சமூக அறிவியல் கல்வியின் கொள்கையை தொடர்ந்து வலியுறுத்துவது வெகுவாக எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது. அதன் காரணமாக, சமூக அறிவியல் கல்வியின் மதிப்பு புதிய நாட்டிற்கு அவசியம் என்ற பேச்சு எழுந்தது.
குடிமக்களின் கல்வி என்பதில் ஒரு புதிய கருத்து உண்டான காரணத்தால், ஒரு படித்த சமூதாய அமைப்பு உருவாகும் இடமாகப் பள்ளியைப் பார்த்தார்கள். இந்தப் பாதையில் பல கருத்துக்கள் பிறகு எழுந்தன. சுதந்திரம் அடைந்த பிறகு உருவான முதல் இந்தியாவின் தேசிய கல்விக் குழுவின் அறிக்கை (இந்திய அரசாங்கம், 1966) நாட்டு முன்னேற்றத்தை ஆணித்தரமாக வலியுறுத்தும் வகையில் அமைந்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்த சில ஆண்டுக்களுக்குள்ளேயே, நேருவின் கொள்கைகள்- கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான தேசிய குழு (National Council of Educational Research and Training - NCERT) மற்றும் மாநிலக் குழுக்களின் மூலமாக முக்கியமாக செயல்பட ஆரம்பித்தன.
NCERT - யின் ஆரம்ப காலத்தில் ‘இந்தியாவில் சமூக அறிவியல்களின் நிலை’ என்ற ஒரு ஆய்வு நடத்தினார்கள். இந்தியாவின் பள்ளிகளில் தற்போது கற்பிக்கும் சமூக அறிவியல் பாடங்களில் காணப்படும் பலவிதமான நிறை – குறைகள் ஆகியவைகளின் உண்மை நிலையினை அந்த ஆய்வு தெளிவு படித்தியது.
ஜூன் 1963 முதல் ஜூன் 1964 வரை பள்ளி ஆசிரியர்கள், சமூக அறிவியல் பாடத்தில் நிபுணர்கள், ஆசிரியர் பயிற்சியாளர்கள் ஆகியவர்களின் உதவியுடன் அகில இந்திய அளவில் நான்கு பயிற்சிப்பட்டறைகள் நடத்த, அந்த ஆய்வு வழிவகுத்தது. 1-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை, பாட நூல் வழிகாட்டிகள் (Syllabus) உருவாக்கப்பட்டன.
அந்த வழிகாட்டிகளின் அடிப்படையில், சமூக அறிவியல் பாட புத்தகங்கள் – ‘மாநிலம்’, ‘தேசம்’, ‘உலகம்’ ஆகியவைகளை உள்ளடக்கி – 3-ம் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்பு வரை உருவாக்கப்பட்டன. 6-ம் வகுப்பிலிருந்து 8-ம் வகுப்பு வரை, வரலாறு, குடிமையியல், புவியியல் ஆகியவைகளை உள்ளடக்கிய தனியான பாடபுத்தகங்கள் உருவாக்கப்பட்டன. (கோயல் & சர்மா, - Goel and Sharma - 1987: 176).
பள்ளிகளில் கற்பிக்கப்படும் சமூக அறிவியல்களிலின் தொடக்கத்திலேயே குடிமையியல் கல்வியின் பண்புகளை பாடங்களாகச் சேர்க்க வேண்டும் என்பதுதான் 1975 ஆம் ஆண்டு முதல் தேசிய பாடத்திட்டத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கொள்கையாகும். இருப்பினும், அந்த அறிக்கையினைக் கவனமாகப் படித்தால், பாடத்திட்டக் குறிக்கோளில் சில நுணுக்கமான புதியதும், சில சீர்திருத்தக் கருத்துக்களும் தென்படும்
. முதல் பாடத்திட்ட சட்டம் – 1975 – வருங்கால இளைய குடிமகன்கள், சமூகம், மாநிலம், நாடு மற்றும் பரந்த உலகக் காரியங்களில் ஈடுபட முயலவேண்டும் என்று ஆசைப்பட்ட போதிலும், ஆரம்ப மற்றும் உயர்நிலைக் கல்வியின் தேசிய பாடத்திட்டம் (NCERT, 1988: 5) சமூக அறிவியல்களைக் கற்பிப்பதின் முக்கியமான கருத்தினை வலியுறுத்தியது.
நமது அரசியல் சாதனத்தில் விவரிக்கப்பட்டுள்ள கொள்கைகளைக் கடைப்பிடிப்பதுடன், மக்கள் அவர்கள் கடமைகளையும், உரிமைகளையும் ஒரு குடிமகன் என்ற நிலையில் நன்கு அறிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் அதில் வலியுறுத்தப்பட்ட முக்கியமான கருத்தாகும். பத்து வருடங்கள் கழிந்த பிறகு, பள்ளிக் கல்வியின் தேசிய பாடத்திட்டம் (NCERT– 2000) ஒரு புதிய அரசியல் சூழ்நிலையில் குடிமக்கள் கல்வியை மாற்றி அமைத்தது.
அதன் மூலம், இந்தியன் என்ற பெருமை கொண்டு, அடிப்படைக் கடமைகளை அறிந்து கொள்ளும் விதமான கொள்கைகளை வளப்படுத்தி, தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் விதமான பாடங்களில் நேரிடையாக அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே சமூக அறிவியல் கல்வியின் கொள்கையை தொடர்ந்து வலியுறுத்துவது வெகுவாக எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது. அதன் காரணமாக, சமூக அறிவியல் கல்வியின் மதிப்பு புதிய நாட்டிற்கு அவசியம் என்ற பேச்சு எழுந்தது. குடிமக்களின் கல்வி என்பதில் ஒரு புதிய கருத்து உண்டான காரணத்தால், ஒரு படித்த சமூதாய அமைப்பு உருவாகும் இடமாகப் பள்ளியைப் பார்த்தார்கள்.
|
பிற்காலத்தில் கொண்ட கருத்து 1975 ஆம் ஆண்டு பாடத்திட்டத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரண்பாடாக அமைந்தது. NCERT- 1975: 19 அறிக்கையில் மிகவும் தெளிவகச் சொல்லப்பட்டவைகள் இது தான்: “குறுகிய மனப்பான்மை, கொள்கைப் பிடிவாதம், முன்னேற்றத்தைத் தடுக்கும் குணம் ஆகியவைகளை வளரவிடாமல் தடுத்து, சுதந்திரம், பொது உடைமை, மனிதாபிமானம் ஆகிய கொள்கைளையும், அவைகளின் உயர்ந்த தன்மைகளையும் உயர்த்தும் விதமான பாடங்களை சமூக அறிவியலில் சேர்ப்பதின் மூலம் முக்கிய பண்புகளை அடையத் தேவையான அறிவினைப் பெற்று, சரியான மனநிலையினை வளர்த்துக் கொள்ளும் படியான ஒரு நேர்மையான உலக அமைப்பு ஏற்படும்படிச் செய்யவேண்டும்.
அந்த நிலை ஏற்பட்டால், பொருளாதாரம் மற்றும் சமூக நலன்கள் மேம்பட்டும், வன்முறைகள் குறைந்தும், சுற்றுப்புற அமைதி அதிகமாகியும் காணப்படும். (NCERT, 1975: 19)
NCFSC, 2000 என்ற அறிக்கையில் கூறப்பட்ட கருத்துக்கள், 1988 ஆம் ஆண்டு கல்வித் திட்ட அறிக்கைக்கு நேர் எதிர்மாறாக இருந்தது. NCERT, 1988: 3 என்ற அறிக்கையில் கூறப்பட்ட வாசகங்கள் இதோ: ‘குடிமக்களை சமூக அறிவியல் பாடங்களைக் கற்பிப்பதன் மூலம் சமூகத் தொழில் திறமைகளையும், குடிமை இயல்களையும் மேம்படுத்தி சமூகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் முயற்சியில் பங்குகொள்ள அவர்களை ஈடுபடுத்த முயலுவதாகும்.
சமீபகாலத்திய NCF (National Curriculum Framework) பரிசீலனை அறிக்கையில் அரசியல் சட்டத்தில் திட்டவட்டமாகக் கூறப்பட்ட கொள்கைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்ட அதே சமயத்தில், சமூக அறிவியல் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமாக தீவிரமான கொள்கையாகச் செயல்படுத்த வேண்டும் என்று அணித்தரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
முதலில், சமூக அறிவியலின் நோக்கத்தின் முக்கிய தன்மையும், ஒரு நேர்மையானதும், அமைதியானதுமான சமூகத்தை உருவாக்குவதற்கு அவசியமான அறிவையும் விரிவாக எடுத்துரைக்க வேண்டும். கல்வியின் மூலம் தான் இதை அடைய முடியும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதாகிறது.
‘கல்வியில் பொதுவான குறிக்கோளில் சமூக அறிவியல் பாடங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்’ என்று 1988 ஆம் ஆண்டு கல்வி திட்ட அமைப்பு இந்தக் கருத்தைத் தான் குறிக்கிறது.
இரண்டாவதாகக் கூறப்பட்ட கருத்து மிகவும் முக்கியமான ஒன்றாகும். அது சமூக விசாரணையை ஒரு அறிவியல் செயலாக உருவாக்க முயல்கிறது.
அதில் அதிகார ஆணவப்போக்குகளை எதிர்த்து, மாணவர்களிடையே ஒரு பகுத்தறிவுக்கு ஏற்புடைய நன்னெறி, மனத்திண்மை ஆகியவைகளை உயிர்த்தெழச்செய்து, அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்ட உரிமைகளைச் சில சமூக விரோதிகள் பறிக்க முற்படும் போது விழிப்புடன் இருக்கும் படிச் செய்ய வேண்டும் என்றும், அந்த மாணவர்களிடையே உணர்ச்சியுள்ள கேள்வி கேட்கும் திறனுள்ள எழுச்சியுள்ள மாற்றங்களை உருவாக்கும் குடிமக்களை உருவாக்குவதும் அவசியமாகும் என்றும் வலுயுறுத்தப்படுகின்றன.
தமிழ்மொழி
ஒதாமல் ஒரு நாளும் இருக்க வெண்டாம் 1
ஒதுவது ஒழியேல் கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே 2 ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து 3
போன்ற வரிகள் கல்வியின் மேன்மையை நமக்கு உணர்த்துகின்றன.
மக்களை பிற உயிர்களிடமிருன்து வெறுபடுத்துவது மொழி. மொழி இயல்பனது. தன் உள்ளத்து உணர்வுகளை எளிமையாக வெளிபடுத்த உதவுவது. நமது பண்பட்டினை ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது. தமிழ்மொழியைப் பயில்வதால் மொழிப்பற்றும் நட்டுப்பற்றும் மேம்படும்.
பிற பாடங்களை படிப்பதற்கும் அடிப்படையானது தாய் மொழி. எனவே தாய் மொழி கற்றலும் கற்பித்தலும் அவசியமாகிறது.
பிற பாடங்களை படிப்பதற்கும் அடிப்படையானது தாய் மொழி. எனவே தாய் மொழி கற்றலும் கற்பித்தலும் அவசியமாகிறது.
தாய்மொழி முதல் மொழி மக்களை பிற உயிர்களிடமிருந்து வேறுபடுத்துவது மொழி. குழந்தை தன் தாயிடமே முதல் கற்றலைத் தொடங்குகிறது. தாய் தன் குழந்தைக்கு முதன் முதலில் தன் தாய் மொழியையே பயிற்றுகிறாள். பின் தன் உறவினர்கள் தன் வீட்டைச்சுற்றியுள்ள சமூகத்திடமிருந்தும் ஓரளவிற்கு மொழியைப் பேசக் கற்றுக்கொள்கிறது.
இவ்வாறு ஓரளவிற்கு மொழியைப் பேசக் கற்றுக்கொண்ட பின்பே பள்ளிக்கு வருகிறது. ஆசிரியர் குழந்தையின் மழலைச்சொற்கள் கொச்சைச் சொற்கள், வட்டார வழக்குகள் நீக்கி பேசவும், கேட்கவும், படிக்கவும், எழுதவும் கற்பிக்கிறார். இவ்வாறு பள்ளியிலேயே மொழிக்கற்றல் முழுமைபெறுகிறது.
மூவகை மொழிக்கற்றல் 1. மொழிக்கற்றல் 2. மொழியைப்பற்றிக் கற்றல் 3. மொழிவழிக்கற்றல்
மொழிக்கற்றல் என்பது மொழியின் அடிப்படைத்திறன்களைக் கற்றல் ஆகும் அடிப்படைத் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் போன்ற திறன்களை தொடக்க நிலையில் மாணவர்கள் பெறுதலே மொழிக்கற்றலாகும்.
மொழியைப்பற்றி கற்றல் மொழியைக்கற்றுக்கொண்டபின் மொழியில் உள்ள இலக்கியங்கள் இலக்கணங்கள, மொழியியல், மொழியின் அமைப்பு, பயன்பாடு போன்றவற்றை கற்றல் மொழியைப்பற்றிக் கற்றல் ஆகும்.
மொழிவழிக்கற்றல் மொழியின் வழியாக பிற பாடங்களைக் கற்றல் மொழிவழிக்கற்றல் ஆகும்.
மொழியில் உள்ள அடிப்படை திறன்களைக்கற்ற பின் அம்மொழியின் வழியாக அறிவியல், கணிதம், புவியியல், வரலாறு போன்ற பிறப்பாடங்களை கற்க இயலும். தொடக்கநிலையில் மொழி கற்றல் சிறப்பாக நடைப்பெற்றாலதான் பின் மொழிவழிக்கற்றலும் மொழியைப்பற்றிய கற்றலும் சிறப்பாக நடைபெறும். மொழிப்பாடம் ஒரு திறன் பாடம் "கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய அடிப்படைத் திறன்களை மொழிப்பாடம் வளர்த்தலால் மொழிப்பாடம் ஒரு திறன் பாடம்".4
மொழியில் உள்ள அடிப்படை திறன்களைக்கற்ற பின் அம்மொழியின் வழியாக அறிவியல், கணிதம், புவியியல், வரலாறு போன்ற பிறப்பாடங்களை கற்க இயலும். தொடக்கநிலையில் மொழி கற்றல் சிறப்பாக நடைப்பெற்றாலதான் பின் மொழிவழிக்கற்றலும் மொழியைப்பற்றிய கற்றலும் சிறப்பாக நடைபெறும். மொழிப்பாடம் ஒரு திறன் பாடம் "கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய அடிப்படைத் திறன்களை மொழிப்பாடம் வளர்த்தலால் மொழிப்பாடம் ஒரு திறன் பாடம்".4
தொடக்கநிலையில் குழந்தைகளிடம் மொழித்திறனை வளர்த்தலே முதலிடம் பெறுகிறது. இதற்கு பாடப்பொருள் தேவையாயினும் அது சிறப்பிடம் பெறுவதில்லை ஆனால் பிறப் பாடங்களில் பாடப்பொருள் அதாவது பாடக்கருத்து சிறப்பிடம் பெறுகிறது. அறிவியல் பாடத்தில் அறிவியல் சார்ந்த பாடப்பொருளும் வரலாறு பாடத்தில் மன்னர்களின் வரலாறு, போர் நிகழ்வுகள் போன்ற செய்திகளும் சிறப்பிடம் பெறுகிறது. புத்தகம் மாறினாலும் ஆண்டு தோறும் அதே பாடங்களே பாட நூலில் இடம் பெறும். ஆனால் மொழிப்பாடத்தில் புத்தகம் மாறும்போது ஒரேப்பாடப்பொருள் இடம்பெறுவதில்லை.
மொழிப்பாடத்தில் பாடப் பொருளைவிட மாெழித்திறன்களே சிறப்பிடம் பெறுகிறது. அடிப்படைத் திறன்களை வளர்க்க பாடப்பொருள் தேவை. அப்பாடப்பொருளைக் கொண்டே மொழித்திறன்கள் வளர்க்கப்படுகின்றன எனவே மொழிப்பாடம் ஒரு திறன் பாடம். இது பாடப்பொருள் பாடம் அல்ல.
மொழிப்பாடத்தில் பாடப் பொருளைவிட மாெழித்திறன்களே சிறப்பிடம் பெறுகிறது. அடிப்படைத் திறன்களை வளர்க்க பாடப்பொருள் தேவை. அப்பாடப்பொருளைக் கொண்டே மொழித்திறன்கள் வளர்க்கப்படுகின்றன எனவே மொழிப்பாடம் ஒரு திறன் பாடம். இது பாடப்பொருள் பாடம் அல்ல.
கணிதம்
கணித பாடம் கற்பித்தலின் அவசியம்
|
Comments
Post a Comment