Posts

உலகமயமாதல்

உலகமயமாதல்  தொலைத்தொடர்பு ,  போக்குவரத்து ,  தகவல் தொழில்நுட்பம் ,  அரசியல் ,  பண்பாடு , ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக சமூகங்களுக்கிடையேயான அதிகரிக்கும் தொடர்பையும் அதனால் ஏற்படுத்தப்பட்டுவரும் ஒருவரில் ஒருவர் தங்கிவாழ் நிலையையும்  உலகமயமாதல்  எனலாம். உலகமய சூழலில் ஒரு சமூகத்தின்  அரசியல் , பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளும் நிகழ்வுகளும் மற்றைய சமூகங்களில் கூடிய விகித தாக்கத்தை ஏதுவாக்குகின்றது. உலகமயமாதல் வரலாற்றில் ஒரு தொடர் நிகழ்வுதான், ஆனால் இன்றைய சூழல் உலகமயமாதலை கோடிட்டு உலகமயமாதலும் பண்பாடும் உலகமயமாதல் பலமான மொழி, பண்பாட்டு, அடையாளங்களை முன்னிறுத்தி சிறுபான்மை இன - மொழி - பண்பாட்டு அழிவுக்கு அல்லது சிதைவுக்கு இட்டு செல்வதாக சிலர் வாதிக்கின்றனர். இக்கூற்றில் உண்மையுண்டு, எனினும் ஒரு சமூகத்தின் அடிப்படைக் கூறுகளை இழக்காமல் உலகமயமாதல் உந்தும் அல்லது தருவிக்கும் அம்சங்களையும் ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ள முடியும். அதாவது உலகமயமாதல் இருக்கும் ஒன்றின் அழிவில் ஏற்படமால், இருக்கும் ஒன்றோடு அல்லது மேலதிகமான அம்சங்களை அறி...

சமூக ஊடகங்கள்

சமூக ஊடகங்கள்  ஆதி மனிதன் ஒருவரோடு ஒருவர் தொடர்புக் கொள்ளவும் தகவல்களை தெரிவிக்கவும் பயன்படுத்திய “பறை” ஒலியே இந்த உலகின் முதன் முதல் ஊடகமாகும். பின்பு புறாவில் தூது, ஒற்றர்கள் மூலம் செய்தி, அஞ்சல் மூலம் தகவல், தொலைபேசி வழி என கற்காலம் தொடங்கி கணினி காலமான இன்று வரை சமூக ஊடகத்தின் பரிணாமவளர்ச்சி பல கட்டங்களை கடந்து அசாத்திய முன்னேற்றம் பெற்றுள்ளது. அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க இயலாது வாழ்வின் அங்கமாகிவிட்டது. இந்த நிலையில் சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் தாக்கமும் வரமா ? சாபமா ? என்ற கேள்வி அனுதினமும் பேசுபொருளாகிவிட்டது. சமூக ஊடகங்களின் சாதக பாதகங்களை இக்கட்டுரையில் அலசுவோம். சமூக ஊடகம் என்பவை என்ன ? மக்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து இருக்கவும், உலகில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும், நமது அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்வது இந்த சமூக ஊடகங்கள். இன்று மக்களிடையே மிகப் பிரபலமான சமூக ஊடகங்களாக காணப்படுவது கூகுள், பேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஸ்கைப், யூடியுப் போன்றவையும் இன்னும் பல சமூக வலைத்தளங்கள் ஆக...

பாலின பாகுபாடு

பாலின பாகுபாடு பெண்களுக்கிருக்கும் சவால் என்பது எல்லாத் துறைகளுக்கும் பொதுவான ஒன்று. கல்வியறிவு பெற்று பணிபுரியத் தொடங்கிய காலகட்டத்தில் பெண்களுக்கான பிரத்யேக வேலைகளில் ஒன்றாக ஒதுக்கப்பட்டது ஸ்டெனோகிராபர் பணி.  அந்த காலக் கட்டத்தில் வந்த திரைப்படங்களில் பார்த்தால் ஸ்டெனோகிராஃபர்கள் எப்போதும் மேனேஜர்களின் மடியிலேயே உட்கார்ந்திருப்பதைப் போலவேதான் காட்சிகளை அமைத்தார்கள். அன்றைய தேதிக்கு நவீன துறையாக இருந்த ஸ்டெனோகிராஃபி பணிக்கு பெண்கள் அதிகளவில் வரத் தொடங்கினார்கள்.  திறமையால் வந்தார்கள் என்பதை விடவும் வயதையும் அழகையும் முன்னிறுத்தி பாலினத்தை தவறாக பயன்படுத்தியதாலே பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக அப்போது நம்பப்பட்டது. அதை தான் திரைப்படங்களில் காட்சிபடுத்தினார்கள். வெற்றிகரமான செயல்படும் ஒரு பெண் திறமையால் அதை சாதித்திருக்கமாட்டார் என்று நம்புவது இந்த சமூகத்தின் பொது புத்தி. இந்த பொது புத்திதான் இன்று ஊடகங்களிலும் நிலை கொண்டிருக்கிறது. பெண்களின் திறமையை புறக்கணிப்பதிலும் சாதனைகளை இழிவுபடுத்துவதிலும் ஆண்கள் அளவிற்கு (கூடுதலாகவே கூட) பெண்களும் ஈடுபடுகிறார்கள்...

மும்மொழிக் கொள்கை

மும்மொழிக் கொள்கையில் மாற்றம்    தமிழ்நாட்டில் 1968-ல் திமுக அரசு மும்மொழிக் கொள்கையை இரு மொழிக் கொள்கையாகச் சட்டமன்றத் தீர்மானத்தின் மூலம் மாற்றியது. தமிழ் அடையாளத்தின்மீது கட்டுமானம்                     செய்யப்பட்ட மாநில ஒருமைப்பாட்டுக்கு, இந்தி (அல்லது இன்னொரு இந்திய மொழி) தேவை இல்லை என்ற நோக்கத்தைக் கொண்டு இந்தக் கொள்கை அமைந்தது. தமிழ்நாட்டு மாணவர்களின் வாழ்க்கை வாய்ப்புகளுக்கு ஆங்கிலமே போதும் என்ற நோக்கத்தையும் இருமொழிக் கொள்கை உள்ளடக்கியது.                   மத்திய அரசு தான் நடத்திய கேந்திரிய வித்தியாலயங் களில் இருமொழிக் கொள்கையைப் பின்பற்றியது. தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின் கீழ் வரும் பள்ளிகளில் தமிழும் ஆங்கிலமும் கற்பதுபோல், மத்தியக் கல்வி வாரியத்தின்கீழ் உள்ள கேந்திரிய வித்தியாசாலைகளில் மாணவர்கள் இந்தியும் ஆங்கிலமும் கற்றனர்.  இந்திய அரசில் பணிபுரியவும், இந்தியப் பொருளாதாரத்தில் பங்குகொள்ளவும் இந்த இரண்டு மொழிகளே போதும் என்ற நோக்கத்தில் இந்த இருமொழிக் கொள்கை அம...

பள்ளி பாடத்தின் முக்கியத்துவம்

பள்ளி பாடத்தின்  முக்கியத்துவம் சமூக அறிவியல் இந்தியப்   பள்ளிகளில்   சமூக   அறிவியல்   கற்பித்தலின்   பரிணாம   வளர்ச்சி : பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்குப் பிறகு இந்தியாவில் சமூக அறிவியல்களைக் கற்பிப்பது, மற்ற புதிய விடுதலை பெற்ற தேசங்களைப் போல், புதிய நவீன இந்தியாவை நினைத்து உருவாக்கும் தேவைகளால் அதிக முக்கியத்துவம் பெற்றது.   இந்தியாவில் ஆரம்பகால சமூக அறிவியலின் தோற்றமும், அவசியமும் பற்றி அறிய வேண்டுமானால், ‘பொதுவான குடிமக்கள் கல்வியில் சமூக அறிவியல் கற்பிக்கும் பங்கு’ என்ற யுனெஸ்கோ, 1954:60 அறிக்கையின் கொள்கைதான் மூலகாரணமாக இருக்கும்.  இதன் மூலம், இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே சமூக அறிவியல் கல்வியின் கொள்கையை தொடர்ந்து வலியுறுத்துவது வெகுவாக எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது. அதன் காரணமாக, சமூக அறிவியல் கல்வியின் மதிப்பு புதிய நாட்டிற்கு அவசியம் என்ற பேச்சு எழுந்தது.     குடிமக்களின் கல்வி என்பதில் ஒரு புதிய கருத்து உண்டான காரணத்தால், ஒரு படித்த சமூதாய அமைப்பு உருவாகும் இடமாகப் பள்ளியைப் பார்த்தார்க...

பள்ளிக்கு வெளியே கற்றல் ,பள்ளிக்கு உள்ளே கற்றல்.

வகுப்பறைக்கு வெளியே: தெளிவாகப் பேசுதல், நிமிர்ந்து முகம் பார்த்துப் பேசுதல், சத்தமாக, தைரியமாகப் பேசுதல் போன்ற பண்புகளை வகுப்பறையில் வளர்த்துக்கொள்ளும்போது, உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை வரும். இந்தப் பண்புகளே வெளி  உலகத்தில் கெட்ட எண்ணங்களுடனும், நயவஞ்சகமாகவும் பேசி, தவறான வழியைப் பயன்படுத்த நினைப்பவருக்கும் ஒரு பயத்தைக் கொடுக்கும். அந்நியரின் பரிசுப் பொருள் வேண்டாம்: எந்த உறவினரும், அந்நியரும் உங்கள் பெற்றோருக்குத் தெரியாமல் கொடுக்கும் பரிசுப் பொருட்களை வேண்டாம் என்று தெளிவாக மறுத்துவிடுங்கள். மாணவர்கள், தம் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்திக்கொள்ள, ஆசிரியர்களும் பெற்றோர்களும் உதவ வேண்டும். பாராட்டு எனும் விருது! பிறரைப் பாராட்டுவது போல உங்களையே பாராட்டிக்கொள்ளுங்கள். உதாரணமாக, இன்று செய்த செயல்களில் பெருமைப்படக்கூடிய செயல் எது? நாளை எந்தச் செயலை சிறப்பாகச் செய்யலாம் போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள். ஒருவரைப் பாராட்டும்போது, அவர்களிடம் புத்துணர்ச்சி ஏற்படும். செயல்களில் ஈடுபாட்டுடன் பங்கேற்க உதவும். நமது பாராட்டு,   அவர்களுடைய செயலுக்குக் கிடைத்த ...

வகுப்பறைக் கற்பித்தல் முறைகள்

வகுப்பறைக் கற்பித்தல் முறைகள் சாதாரணமாக வகுப்பறைக் கற்பித்தலில் ஈடுபடும் போது ஒரு பாட அலகை கற்பிப்பதற்கு மிகச் சிறந்த கற்பித்தல் முறை எதுவென யாரும் சிபார்சு செய்யமுடியாது. ஆசிரியரே படைப்பாற்றலுள்ளவராகக் கருதப்படுகிறார்.  கற்பித்தல் ஓரு விஞ்ஞானம் போன்ற ஒரு கலையாகும். மிகச் சிறந்த கற்பித்தல் முறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளல் ஆசிரியரின் கடமையாகும்.     பாடத்தைக் கற்பித்தலின் நோக்கம், மாணவரின் இயல்பு, பாடஅலகின் தன்மை, பௌதிக சூழலின் தன்மை, பெற்றுக்கொள்ளக்கூடிய கட்புல, செவிப்புல சாதனங்கள், ஆசிரியரின் சுபாவம் அகிய அனைத்து சாதனங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.  அந்த வகையில் வகுப்பறைக் கற்பித்தலை திட்டமிடுவதில் பல கற்பித்தல் முறைகள் காணப்படுகின்றன.   எனவே பொருத்தமான சூழலில் பொருத்தமான பாடஅலகிற்கு ஏற்ப பொருத்தமான கற்பித்தலை மேற்க்கொண்டால் வகுப்பறைக் கற்பித்தல் சிறந்து விளங்கும்.  அந்தவகையில் கற்பித்தல் முறைகளை பின்வருமாறு வகைப்படுத்த முடியும். 1.விரிவுரை முறை கற்பித்தல் 2.குழுமுறைக் கற்பித்தல் 3.வினாவிடை முறைக்கற்பித்தல் 4.கூட்டுமுறைக்கற்பித்த...