சமூக ஊடகங்கள்
சமூக ஊடகங்கள் ஆதி மனிதன் ஒருவரோடு ஒருவர் தொடர்புக் கொள்ளவும் தகவல்களை தெரிவிக்கவும் பயன்படுத்திய “பறை” ஒலியே இந்த உலகின் முதன் முதல் ஊடகமாகும். பின்பு புறாவில் தூது, ஒற்றர்கள் மூலம் செய்தி, அஞ்சல் மூலம் தகவல், தொலைபேசி வழி என கற்காலம் தொடங்கி கணினி காலமான இன்று வரை சமூக ஊடகத்தின் பரிணாமவளர்ச்சி பல கட்டங்களை கடந்து அசாத்திய முன்னேற்றம் பெற்றுள்ளது. அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க இயலாது வாழ்வின் அங்கமாகிவிட்டது. இந்த நிலையில் சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் தாக்கமும் வரமா ? சாபமா ? என்ற கேள்வி அனுதினமும் பேசுபொருளாகிவிட்டது. சமூக ஊடகங்களின் சாதக பாதகங்களை இக்கட்டுரையில் அலசுவோம். சமூக ஊடகம் என்பவை என்ன ? மக்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து இருக்கவும், உலகில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும், நமது அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்வது இந்த சமூக ஊடகங்கள். இன்று மக்களிடையே மிகப் பிரபலமான சமூக ஊடகங்களாக காணப்படுவது கூகுள், பேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஸ்கைப், யூடியுப் போன்றவையும் இன்னும் பல சமூக வலைத்தளங்கள் ஆக...