பள்ளி பாடத்தின் முக்கியத்துவம்
பள்ளி பாடத்தின் முக்கியத்துவம் சமூக அறிவியல் இந்தியப் பள்ளிகளில் சமூக அறிவியல் கற்பித்தலின் பரிணாம வளர்ச்சி : பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்குப் பிறகு இந்தியாவில் சமூக அறிவியல்களைக் கற்பிப்பது, மற்ற புதிய விடுதலை பெற்ற தேசங்களைப் போல், புதிய நவீன இந்தியாவை நினைத்து உருவாக்கும் தேவைகளால் அதிக முக்கியத்துவம் பெற்றது. இந்தியாவில் ஆரம்பகால சமூக அறிவியலின் தோற்றமும், அவசியமும் பற்றி அறிய வேண்டுமானால், ‘பொதுவான குடிமக்கள் கல்வியில் சமூக அறிவியல் கற்பிக்கும் பங்கு’ என்ற யுனெஸ்கோ, 1954:60 அறிக்கையின் கொள்கைதான் மூலகாரணமாக இருக்கும். இதன் மூலம், இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே சமூக அறிவியல் கல்வியின் கொள்கையை தொடர்ந்து வலியுறுத்துவது வெகுவாக எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது. அதன் காரணமாக, சமூக அறிவியல் கல்வியின் மதிப்பு புதிய நாட்டிற்கு அவசியம் என்ற பேச்சு எழுந்தது. குடிமக்களின் கல்வி என்பதில் ஒரு புதிய கருத்து உண்டான காரணத்தால், ஒரு படித்த சமூதாய அமைப்பு உருவாகும் இடமாகப் பள்ளியைப் பார்த்தார்க...